மதுரை: சிவகங்கை கனிம குவாரிகளில் அரசு நிர்ணயித்ததை விட அதிக அளவு பணம் பெறுவதை தடுக்க கோரிய வழக்கில், கனிமவளத்துறை இயக்குநர் மற்றும் சிவகங்கை ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. குவாரிகளில் இருந்து தனியாருக்கு விற்க அரசு நிர்ணயம் செய்த தொகை மிகவும் குறைவு என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிக தொகைக்கு மணல், கல் விற்பனை செய்வதாகவும், அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பாகவும், சில தனிநபர்களுக்கு லாபகரமாகவும் அமைந்துள்ளது. கனிம திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீதும், உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
+
Advertisement