தனது சகோதரியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட நபரை வெட்டிக் கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தனது சகோதரியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ராமச்சந்திரன் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த ரிவின் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இக்கொடூரச் செயலுக்கு உடந்தையாக இருந்த ரிவினின் தாய், தந்தையர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

