கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் ,‘‘எஸ்ஐஆர் தொடர்பான மற்றும் பிற தேர்தல் தொடர்பான தரவு பதிவு பணிகளுக்கு ஒப்பந்த டேட்டா என்ட்ரி ஆபரட்டர்கள் மற்றும் பங்களா சஹ்யத கேந்திரா ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டாம் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேற்கு வங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு பதிலாக 1000 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மற்றும் 50 சாப்ட்வேர் டெவலப்பர்களை ஓராண்டிற்கு பணி அமர்த்துவதற்கான அறிவிக்கையை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மாவட்ட அலுவலகங்களில் ஏற்கனவே கணிசமான அளவு திறமையான வல்லுநர்கள் இருக்கும் நிலையில், ஓராண்டுக்கு அவுட்சோர்ஸ் செய்ய வேண்டிய அவசியம் என்ன? கள அலுவலகங்கள் செய்ய வேண்டிய பணியை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் ஏற்பது ஏன்? குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியின் வேண்டுகோளின் பேரில், தனிப்பட்ட நலன்களுக்கு சேவை செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா என சந்தேகம் எழுகிறது. மேலும், தனியார் குடியிருப்பு வளாகங்களுக்குள் வாக்குச்சாவடிகளை அமைக்கும் திட்டமும் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது ’’ என்று கூறி உள்ளார்.



