சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்டித்து வருகிற 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பீகாரின் தேர்தல் முடிவு யாரும் எதிர்பாக்காத ஒன்று. பாஜ மற்றும் தேர்தல் ஆணையம் என இரண்டு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து கொண்டு வந்த சதியாக எஸ்.ஐ.ஆர் திட்டத்தை கொண்டு வந்து உள்ளன. தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளை கைவிட வேண்டும் என விசிக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்டித்து வருகிற 24ம் தேதி விசிக சார்பாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பீகாரில் செய்தது போல் தமிழகத்தில் செய்ய நினைக்கிறார்கள். தில்லுமுல்லு செய்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள். மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
+
Advertisement


