பெரியபாளையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி 2025-26 ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபாளையம் அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் கோயிலுக்கு சொந்தமான் இடத்தில் இந்து சமய அறநிலைய துறையின் திருவள்ளூர் மண்டல இணை ஆணையர் அனிதா மேற்பார்வையில் சிறுவாபுரி குளத்தை சுற்றிலும், சிவன் கோயில் இடத்திலும் 200 மரக்கன்றுகள் மற்றும் 300 பனை விதைகளை நடும் விழா நடந்தது. இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சிவஞானம், கோயில் செயல் அலுவலர் மாதவன், மருத்துவர் ராஜேஷ் பாபு, ரமேஷ் மற்றும் ஆலய பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement

