மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்து உள்ளர். தற்பொழுது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சோதியக்குடி நான்கு வழி சாலையில் அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் சிலையை திறந்துவைத்தார். அங்கு இருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து பொதுமக்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை முடித்து கொண்டு பின்னர் சீர்காழி அருகே உள்ள சாம்பராகாது கிராமத்தில் அமைக்கப்பட்டு உள்ள கலைஞரின் சிலையை திறந்து பின்னர் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள கட்சி நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கிறார்.