Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சீர்காழி சுற்று வட்டாரப் பகுதிகளில் 45 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவு பணிகள் தீவிரம்

சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், கதிராமங்கலம், அட்டகுளம், ஆதமங்கலம், பெருமங்கலம், கொண்டல், திருவெண்காடு திருவாலி, கீழச்சாலை , மங்கைமடம், திருநகரி, புதுத்துறை, நாங்கூர், காத்திருப்பு, செம்பதனிருப்பு வடகால், எடமணல், கற்கோயில் தொழுதூர், எடக்குடி வடபாதி , உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு சுமார் 45 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவு பணிகள் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது தற்போது விவசாயிகள் பருவ மழை தொடங்கி விட்டதால் சம்பா நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன பெரும்பாலான இடங்களில் சுமார் 12000 ஏக்கரில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர் நேரடி நெல் விதைப்பு செய்வதால் விதை விடும் பணி நாற்று பறிக்கும் பணி நடவு பணி ஆகியவற்றின் செலவு மிச்சமாகும் எனவும் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு நேரடி நெல் விதைப்பு பணியில் அதிக அளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக விவசாயிகள் முதற்கட்டமாக சுமார் 4000 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் சம்பா நடுபணிகளை தொடங்க விவசாயிகள் விதை விடும் பணியை தொடங்கியுள்ளன.

இதற்காக விவசாயிகள் டிராக்டர்களை பயன்படுத்தி வயலில் உழவு செய்து வாயில்களை சரி செய்து வருகின்றன, சில இடங்களில் விவசாயிகள் வரப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு வாரங்களில் சம்பா நடவு பணிகள் முழுமை பெறும் என்று நம்பலாம்.