சீர்காழியில் மாற்று மருந்து செலுத்தப்பட்ட 27 கர்ப்பிணிகளும் நலமுடன் இருப்பதாக சுகாதாரத்துறை அறிக்கை!!
தஞ்சாவூர்: சீர்காழியில் மாற்று மருந்து செலுத்தப்பட்ட 27 கர்ப்பிணிகளும் நலமுடன் இருப்பதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சீர்காழி அரசு மருத்துவமனையில் நேற்று ஊசி போட்டுக் கொண்ட 27 கர்ப்பிணிகளுக்கு நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டது. கர்ப்பிணிகளிடம் உடல் நலம் குறித்து ஆட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் கேட்டறிந்தனர். கர்ப்பிணிகளுக்கு செலுத்திய செஃபோடாக்சிம் எனும் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.