புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சிரிஷ் சந்திர முர்முவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருக்கும் ராஜேஸ்வர் ராவ் வரும் அக்டோபர் 8ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.இதையடுத்து ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சிரிஷ் சந்திர முர்முவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. தற்போது செயல் இயக்குநராக உள்ள சிரிஷ் சந்திர முர்மு அக்டோபர் 9ம் தேதி பொறுப்பை ஏற்பார். 3 ஆண்டுகளுக்கு பதவியை வகிப்பார். ரிசர்வ் வங்கியில் ஏற்கனவே டி.ரபி சங்கர்,சுவாமிநாதன்,பூனம் குப்தா ஆகிய 3 துணை ஆளுநர்கள் உள்ளனர்.
+
Advertisement