நாகை மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் நியமனம்; எஸ்ஐஆர் பணியை துரிதப்படுத்த தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.என்.அமிர்தராஜ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீண்டும் இயல்பான நிலைமைக்கு திரும்பும் வரை, நாகை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளராக பி.வி.ஆர். விவேக் வெங்கடராமன் நியமிக்கப்படுகிறார். அதேபோன்று எஸ்ஐஆர் பணியை துரிதப்படுத்த சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அதன்படி, வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக சி.கே.போஸ், வி.கனகராஜ், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக ஆர்.எம்.ஆர். ராஜேந்திரன் நாட்டார், ஏ.ஆர்.நவ்ஷாத் பாபு, ஏ.தெய்வானை நியமிக்கப்படுகிறார்கள். கீழ்வேளுர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக கே.ராமதாஸ், என்.சிங்காரவேல், எஸ்.லியோ நியமிக்கப்படுகிறார்கள்.



