Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தில் சென்னையில் நவ.24ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும்: திருமாவளவன் பேட்டி

சென்னை: எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தில் சென்னையில் நவ.24ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன்; தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி. ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் பேசினேன். இலங்கை தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து பேசப்பட்டது. 20 ஆண்டுக்கு மேலாக தமிழக சிறையில் தண்டனை கைதிகளாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும். பத்மஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசான் போன்ற கலைஞர்களுக்கு மாதாந்திரம் ரூ.20,000 வழங்க வேண்டும். அபாயகரமான ஆலைகளில் கர்ப்பிணிகள் தவிர மற்ற பெண்கள் பணியாற்றலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வைத்துள்ள கோரிக்கை குறித்து முதலமைச்சரிடம் பேசினேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்பது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை; தேர்தல் ஆணையமும் பாஜகவும் சேர்ந்து நடத்தும் கூட்டு சதிதான் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை; எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தில் சென்னையில் நவ.24ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.