கொல்கத்தா: மேற்குவங்கத்தின் வடக்கு பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பாசிர்ஹாட் எல்லைப்பகுதிகள் வழியாக சட்டவிரோதமாக வங்கதேசத்துக்கு செல்ல முயன்ற 15 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். இதேபோல் ஞாயிற்றுக்கிழமை(நேற்று) காலை 33 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மேற்குவங்கம் மற்றும் பிற மாநிலங்களில் கூலி வேலை செய்து வந்தவர்கள்.
மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை நடத்தப்பட உள்ளதால் தாங்கள் தடுப்பு காவலில் வைக்கப்படுவோம் அல்லது நாடு கடத்தப்படுவோம் என்ற பயத்திலேயே அவர்கள் தங்கள் சொந்த நாடான வங்கதேசத்துக்கு செல்ல முயன்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர் என தெரிவித்தனர்.
