டாமோ: மத்தியப்பிரதேசத்தில் எஸ்ஐஆர் பணி அழுத்தம் காரணமாக இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். சட்லாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியர் ராமகாந்த் பாண்டே. இவர் மண்டிடீப் பகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டு இருந்தார். நேற்று முன்தினம் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதேபோல் டாமோ மாவட்டத்தின் ரஞ்ச்ரா கிராமத்தில் பூத் நிலை அதிகாரியாக இருந்த ஆசிரியர் கோண்ட் வியாழன்று மாலை கணக்கெடுப்பு படிவங்களை நிரப்பும்போது பலியானார். மேற்கு வங்கத்தில் நடியா மாவட்டத்தில் கிருஷ்ணாநகரில் பங்காள்ஜி பகுதியில் பூத் நிலை அதிகாரியாக இருந்த ரின்கு தராப்தார்(52) என்ற பெண் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
+
Advertisement


