சென்னை: நான் எழுதிய எஸ்.ஐ.ஆர் குறித்த புத்தகத்தை படித்தால் விஜய் ஆர்ப்பாட்டமே வேண்டாம் என முடிவு எடுப்பார் என தமிழிசை செளந்தரராஜன் பேசி உள்ளார். திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவேற்காடு நகர பாஜ சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவேற்காட்டில் நடந்தது. இதில், மாவட்டத் தலைவர் ஆவடி எம். அஸ்வின் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அளித்த பேட்டி:
பீகார் தேர்தல் தமிழகத்திற்கு பாடத்தை சொல்லி கொடுத்துள்ளது. ராகுல் காந்தி வாக்கு திருட்டு என்று கூறுகிறார். பீகாரில் யாரும் மறு தேர்தல் கேட்கவில்லை. எஸ்.ஐ.ஆரை பார்த்து பயப்படுகிறார்கள். வாக்குகள் பறிபோகும் என விஜய் கூறுகிறார். வாக்குகள் எப்படி பறிபோகும். இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதியில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. எஸ்ஐஆ ருக்கு 90% விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு விட்டது. எஸ்.ஐ.ஆர் குறித்து நான் எழுதிய புத்தகத்தை படித்தால் விஜய் ஆர்ப்பாட்டமே வேண்டாம் என முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.


