சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக் குழுக்கள், இடைக்குழுக்கள், கிளை அமைப்புகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தம் ஏற்படுத்தும் விளைவுகளை, பொதுமக்களுக்கு விளக்கி கூறி அணிதிரட்டி, ஆர்ப்பாட்ட இயக்கத்தில் பெருமளவில் பங்கேற்க வேண்டும். மக்களாட்சி முறையை பாதுகாக்கும் ஜனநாயக உரிமை போராட்டம் என்பதை கருத்தில் கொண்டு, வரும் 11ம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாக்காளர்கள் அனைவரும் பங்கேற்று ஆதரிக்குமாறு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கேட்டுக் கொள்கிறது.
+
Advertisement

