தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் மூலம் திமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் எடுபடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருச்சி: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் மூலம் திமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் எடுபடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எஸ்ஐஆர் குறித்து உள்ளபடி அக்கறை இருந்தால் அதிமுக முன்கூட்டியே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்துக் கொண்டிருக்கிறது. திமுகவை இயக்கம் என்று சொல்வதால்தான் நமக்கு ஓய்வே இல்லை என்று கூறுகிறேன். சிறிய சிறிய தடைகளை பார்த்துக்கூட நமது திமுக இயக்கம் நின்றதே இல்லை. ஏங்கிக் கொண்டே இருந்தால் அது ஏக்கம், இயங்கிக் கொண்டே இருந்தால்தான் அது இயக்கம். உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் 80 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ளேன் என்று கூறினார்.

