டெல்லி: எஸ்.ஐ.ஆர். பணிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நவ.11ல் விசாரணைக்கு வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை என்பது வாக்குரிமையை பறிப்பதாக அமையும். தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என திமுக வழக்கு தொடர்ந்தது. திமுக தொடர்ந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி கவாய் அறிவித்துள்ளார்.
+
Advertisement

