சென்னை: சென்னை உட்பட 6 மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து துணைத் தேர்தல் ஆணையர் நேற்று ஆய்வு செய்தார். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி, செயலாளர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் முதல் கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகத்துடன் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடங்கியது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு மற்றும் இயக்குநர் கிருஷ்ண குமார் திவாரி ஆகியோர் நேற்று செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், சிறப்பு தீவிர திருத்தச் செயல்முறையை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வது, பிழையற்ற வாக்காளர் பட்டியலை தயாரிப்பது குறித்தும் துணைத் தேர்தல் ஆணையர் களஆய்வு நடத்தினர், என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
