சென்னை: எஸ்.ஐ.ஆர். பணிகளை நாளை புறக்கணித்தால் ஊதியம் கிடையாது என தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒரு நாள் ஜாக்கோடா ஜியோ ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இன்றைய தினம் அனைத்து துறை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு சம்பளம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி No Work No Pay என்பதை அடிப்படையாக கொண்டு சம்பளம் அளிக்கப்படாது என தெரிவித்தார். மேலும், நாளை காலையில் அலுவலகத்திற்கு வந்தவர்கள் தொடர்பான பட்டியலை நாளை காலை 10.15 மணிக்கு தமிழ்நாடு அரசு மனிதவள மேலாண்மைத்துறை துறைக்கு அளிக்க வேண்டும். அதன்படி துறை மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை, எத்தனை பணியாளர்கள் வந்தார்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நாளை காலை சம்மந்தப்பட்ட துறையின் செயலாளர்கள் மனிதவள மேலாண்மைத்துறைக்கு அளிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அவர் அறிவுறுத்தல் வழங்கினார்.


