SIR குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை: மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: நான் விசாரித்த வரையில் பொதுமக்களிடம் SIR குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் BLOக்கள் எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே புரியவில்லை என சொல்கிறார்கள் என மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். SIR பணிகளில் கவனமுடன் இருக்க மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

