சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு தடைவிதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்படுகிறது. வழக்கு தொடரப்படும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நாளை தொடங்குகிறது.
+
Advertisement
