எஸ்.ஐ.ஆருக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் மாபெரும் பேரணி: காங்கிரஸ் அறிவிப்பு
டெல்லி: எஸ்.ஐ.ஆருக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் மாபெரும் பேரணி நடத்த உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. எஸ்.ஐ.ஆர். நடத்தப்படும் 12 மாநிலத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு கே.சி.வேணுகோபால் அறிவித்தார். இந்திய ஜனநாயகம் மற்றும் எதிர்க்கட்சிகளை அழிப்பதே தேர்தல் ஆணையத்தின் திட்டம். தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை எதிர்த்து நாங்கள் போராடுவோம் என தெரிவித்தார்.


