சென்னை: எஸ்.ஐ.ஆர்., பூத் கமிட்டி பணிகள் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவில் உள்ள 82 மாவட்ட செயலாளர்களோடு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பான ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஒவ்வொரு மாவட்டத் தொகுதிகளில் உள்ள வாக்காளர் திருத்தப்பணிகளை பணியாளர்கள் எந்த அளவிற்கு மேற்கொண்டு வருகிறார்கள். எந்த மாதிரியான பிரச்சனைகள் மாவட்டங்களில் இருக்கிறது. அந்த பணிகளை எவ்வாறு கையாண்டு வருகிறார்கள் என்பது குறித்து விரிவான ஆலோசனையினை மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.
ஏற்கனவே மாவட்ட செயலாளர்களிடம் பூத் கமிட்டி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைகளும், எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடர்பான ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கி இருந்த நிலையில், இன்று காணொலி காட்சி வாயிலாகவும் அவர்களிடம் கேட்டறிந்தார்.
பூத் கமிட்டியின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு, மாவட்ட செயலாளர்கள் எந்த அளவிற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள் என்பது குறித்தான தகவல்களையும் கேட்டறிந்தார். சட்டமன்ற தேர்தலுக்கு ஓரிரு மாதங்கள் உள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் எந்த அளவிற்கு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். திருப்திகரமான செயல்பாடுகள் இல்லாத மாவட்ட செயலாளர்களை கடுமையான எச்சரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.


