ஒற்றை பேனாவால் தமிழ்நாட்டு மக்களின் மனதை கட்டிப்போட்டவர் கலைஞர்: வீடியோ பதிவு வெளியிட்டு திமுக புகழாரம்
சென்னை: கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கலைஞர் எனும் வார்த்தையை கேட்டாலே கலைஞர் தான் நமது நினைவுக்கு வரும். தமிழ்நாட்டை செதுக்கியதால் கலைஞரா?. ஏழை, எளிய மக்களை உயத்தியதால் இவர் கலைஞரா?. இல்லை கலைகளின் கலைஞரா, அரசியல் கலைஞரா?. கலைஞரின் சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். தன் இறுதி மூச்சு வரை கவிதை, கட்டுரை, திரைப்பட வசனங்கள், பாடல் வரிகள், திரைக்கதை என தனது ஒற்றை பேனா மூலம் மக்கள் அனைவரையும் கட்டிப்போட்ட கலைக்கூடாரம் கலைஞர். ஏழை, எளிய மக்களை உயர்த்தி மக்களால் கலைஞர் ஆனார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.