Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒற்றை நுரையீரலுடன் பிறந்த குழந்தைக்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு: எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை சாதனை

சென்னை: ஒற்றை நுரையீரலுடன் பிறந்த குழந்தைக்கு, எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் குழு வெற்றிகரமான அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளித்துள்ளனர். ஒற்றை நுரையீரல் உதரவிதானத்தில் ஏற்பட்ட இந்த துளையால், வயிற்றுப்பகுதியில் உள்ள உறுப்புகள் நகர்ந்து நஞ்சுப்பகுதியில் உள்ள இதயம் நுரையீரல் மீது அழுத்தம் ஏற்படுத்தியதால், அந்த உறுப்புகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, ஒற்றை நுரையீரலுடன் காணப்பட்டது.

மேலும் பிறந்த குழந்தையால் தானாக மூச்சு விடமுடியாது என்பதால் குழந்தை பிறந்தவுடன் உடனடியாக அதன் மூச்சுக்குழலுக்குள் குழாய் செருகலை டாக்டர் பிரிதிவ் ராஜ் வெற்றிகரமாக செய்தார். பச்சிளம் குழந்தைக்கான தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் நிலைமையை சீராக்கும் பணியில் டாக்டர் சி.அசோக் ஈடுபட்டார். இதன்மூலம் குழந்தையின் அடிப்படை உயிர்நிலை கூறுகள் சமநிலைக்கு கொண்டுவரப்பட்டது.

இக்குழந்தையின் உயிருக்கு ஆபத்தான இப்பாதிப்பின் தன்மையை மிகத்துல்லியமாக புரிந்து கொண்ட எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனையின் குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுணர்களான டாக்டர் எம்.சரவண பாலாஜி மற்றும் டாக்டர் என்.பிரதிபா ஆகியோர் மயக்கமருந்து, அறுவை சிகிச்சைக்கான வரைவினை முழுமையாக ஏற்பாடு செய்தனர். வளர்ச்சி பெறாத சுவாச உறுப்புகள் மயக்கவியல் நிபுணர்களுக்கு டாக்டர் வருண் செல்லப்பாண்டி, டாக்டர் பிரியதர்ஷினி சம்பத் பெரும் சவாலாக விளங்கியது.

எனினும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை குழுவினர் மேற்கொண்டனர். குறைவான ஊடுருவலுள்ள தோராகோஸ்கோபிக் அறுவை சிகிச்சை பிறந்து மூன்றே நாளான குழந்தைக்கு தோராகோஸ்கோபிக் மெஷ்பிளாஸ்டி எனப்படும் சிகிச்சை செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. இடம் மாறியிருந்த அடிவயிற்று உறுப்புகளை அடிவயிற்றுக்குள் தள்ளுவதற்காக இந்த அறுவை சிகிச்சையில் ஒரு சிறிய கீறலிடப்பட்டது.

அதன் பிறகு மார்புவயிற்றிடை சவ்வினை வலுப்படுத்துவதற்காக அறுவை சிகிச்சைக்குரிய வலைக்கண்ணி பயன்படுத்தப்பட்டது. குழந்தை படிப்படியாக இயல்பு நிலைக்கு வந்ததைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குள் நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் பி.சத்தியநாராயணன் கூறுகையில், ‘‘நோயறிதல், உயிர்காப்பு சிகிச்சை மற்றும் குறைவான ஊடுருவலுள்ள நுண்துளை அறுவை சிகிச்சை ஆகிய பிரிவுகளில் நிகழ்ந்திருக்கிற மேம்பாடுகள், அதிக சிக்கலான அறுவை சிகிச்சைகளை, அதுவும் குறிப்பாக இதுபோன்ற பாதிப்புள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சைகளை சாத்தியமாக்கியிருக்கின்றன.

மற்ற குழந்தைகளை போல இயல்பு வாழ்க்கையை இக்குழந்தை நடத்துவதற்கு இந்த அரிய அறுவை சிகிச்சையின் மூலம் உதவியிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சிஅடைகிறோம்,’’ என்றார். இதுகுறித்து டாக்டர் சரவண பாலாஜி மற்றும் டாக்டர் பிரதிபா கூறுகையில், ‘‘இத்தகைய ஒரு பெரிய குறைபாட்டுடன் பிறந்த பச்சிளம் குழந்தையின் குறைபாடை சரிசெய்ய தோராகோஸ்கோபிக் மெஷ்பிளாஸ்டி என்ற சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

மிக குறைவான ஊடுருவலோடு மார்புவயிற்றிடை மென்தகட்டிலிருந்த குறைபாடை சரிசெய்வதற்கான இந்த நுண்துளை ஊடுருவல் அணுகுமுறையை நாங்கள் மேற்கொண்டது சிறப்பான, விரைவான குணமடைதலுக்கு வழிவகுத்திருக்கிறது. சிறப்பாக திட்டமிடப்பட்டு ஒருங்கிணைப்போடு செயல்படும்போது பயனளிக்கும் விதத்தில் சிகிச்சை விளைவுகள் கிடைப்பதை இந்த குழந்தையின் உடல்நல முன்னேற்றம் சுட்டிக்காட்டுகிறது,’’ என்றார்.