டெல்லி: தேர்தலில் ஒரு தொகுதியில் ஒரேயொரு வேட்பாளர் போட்டியிட்டால் நோட்டாவை மறுக்க முடியுமா? என்றும், வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை என தெரிவிக்க நோட்டாவை வாக்காளர்கள் பயன்படுத்த வாய்ப்பு தரப்படுமா? என்றும் போட்டியின்றி தேர்வாகும்போது தேர்தல் நடத்தாதது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பல சமயங்களில் போட்டி வேட்பாளர்கள் விலைக்கு வாங்கப்படுவதால் தேர்தலில் ஒரேயொருவர் நிற்கும் சூழல் ஏற்படுகிறது. போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வாபஸ் பெற்று ஒரே ஒருவர் மட்டும் போட்டியின்றி தேர்வு என ஆணையம் அறிவிக்கிறது. ஒரேயொரு வேட்பாளரை பிடிக்கவில்லை என வாக்காளர்கள் தெரிவிக்கும் வாய்ப்பு தேர்தல் நடக்காததால் மறுக்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
+
Advertisement