கவுகாத்தி: வட இந்தியாவின் பிரபல பாடகரான ஸூபின் கார்க் சிங்கப்பூரில் கடந்த 19ம் தேதி கடலில் ஸ்கூபா டைவிங் செய்த போது தவறி விழுந்து ஜூபின் கார்க் உயிரிழந்தார். சிங்கப்பூரில் பாடகர் இறந்ததை விசாரிப்பதற்காக சிறப்பு டிஜிபி எம்பி குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அசாம் அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில் பாடகரின் மரணம் தொடர்பாக சிங்கப்பூர் உடன் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை செயல்படுத்தக்கோரி மாநில அரசு ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் தள பதிவில்,‘‘பாடகர் ஜூபினின் மரணம் தொடர்பாக அசாம் காவல்துறை பதிவு செய்த எப்ஐஆர் தொடர்பாக உள்துறை அமைச்சகம் இப்போது பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை முறையாக செயல்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.