கணவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையான பரிதாபம்; 40 வயது பெண்ணாக இருப்பது மலை ஏறுவதை போன்றது: கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பாடகி
லண்டன்: பிரபல பாப் பாடகி லில்லி ஆலன், தனது கணவரும் நடிகருமான டேவிட் ஹார்பரை கடந்த பிப்ரவரி மாதம் விவாகரத்து செய்தார். கணவர் பிரிவைத் தொடர்ந்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், மீண்டும் போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடும் நிலைக்குச் சென்றதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்காக சிகிச்சை பெற்றதாகவும், உணவுப் பழக்கப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டதாகவும், பிரிவின்போது ஒரு கட்டத்தில் ‘சாக வேண்டும்’ என்ற எண்ணம் கூட தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் மனம் திறந்து பேசியிருந்தார். விவாகரத்திற்குப் பிறகு புதிய உறவுகளைத் தேடுவது மிகவும் கசப்பான ஏமாற்றத்தை அளித்ததாகவும், 40 வயது பெண்ணாக இருப்பது ‘மலை ஏறுவதைப் போன்றது’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், தனது ஐந்தாவது இசைத் தொகுப்பான ‘வெஸ்ட் எண்ட் கேர்ள்’ என்பதை லில்லி ஆலன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து லில்லி ஆலன் கூறுகையில், ‘என் உடல் மற்றும் பாலியல் உணர்வுகள் குறித்து இப்போதுதான் நான் முழுமையாக உணர்கிறேன். என் வயதில் உள்ள பெண்களை சமூகம் விரும்பத்தகாதவர்களாகப் பார்க்க நினைக்கிறது. அதற்கு எதிரான வலிமையான பதிலாகவே இதுபோன்ற கவர்ச்சிப் புகைப்படங்களையும், என் வெளிப்படையான பேச்சையும் பார்க்கிறேன். எனது தனிப்பட்ட சுகத்தை இப்போது நானே சொந்தம் கொண்டாடுகிறேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார். இவரது கருத்து ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
