சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசித்து வருபவர் திலீப்குமார் நிர்மல் குமார்(39). கடந்தவாரம் தீபாவளியையொட்டி கார்லிஸ்லே சாலை அருகே உள்ள திறந்த வெளி பகுதியில் பட்டாசுகளை வெடித்துள்ளார். சிங்கப்பூரில் பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் திலீப்குமாரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அடுத்த விசாரணை நவம்பர் 20ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.67 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
+
Advertisement
