தகுதி சுற்றில் சிங்கப்பூரிடம் 2-1 என தோல்வி: ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த இந்தியா
கோவா: 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் அடுத்த தொடர் 2027ம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்றுப்போட்டிகள் நடந்து வருகிறது. 24 அணிகள் தலா 4 என 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும்.‘சி’ பி பிரிவில் இடம் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் தனது 4வது லீக் போட்டியில் சிங்கப்பூர் அணியுடன் மோதியது.
இதில் ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் லலியன்சுவாலா சாங்டே கோல் அடிக்க முதல் பாதியில் 1-0 என இந்திய முன்னிலை பெற்றது. 2வது பாதியில் சிங்கப்பூரின் சாங் உய்-யங் 44, மற்றும் 58வது நிமிடங்களில் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார். இதற்குபதில் கோல் அடிக்க இந்தியா கடைசி வரை போராடியும் பலன் கிடைக்கவில்லை. முடிவில் 2-1 என இந்தியா தோல்வி அடைந்ததுடன், ஆசிய கோப்பைக்கு தகுதிபெறும் வாய்ப்பையும் இழந்தது. சி பிரிவில் 4 போட்டியில் 2 டிரா,2 தோல்வி என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இந்தியா உள்ளது.