புதுடெல்லி: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் 3 நாள் பயணமாக நேற்று டெல்லிக்கு வந்தார். இந்தியா, சிங்கப்பூர் இடையேயான தூதரக உறவின் 60ம் ஆண்டு நிறைவையொட்டி வோங் இந்தியா வந்துள்ளார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கும் வோங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளார்.
வரும் 4ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கும் சிங்கப்பூர் பிரதமர் வோங் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார். அப்போது, இந்தியா, சிங்கப்பூர் இடையே கப்பல் போக்குவரத்து, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளி போன்ற துறைகளில் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.