Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சில்லி பாயின்ட்...

* ஐதராபாத் கிரிக்கெட் சங்க அணியுடனான புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் பைனலில், சத்தீஸ்கர் அணிக்கு 518 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்சில் ஐதராபாத் 417 ரன், சதீஸ்கர் 181 ரன் எடுத்தன. ஐதராபாத் 2வது இன்னிங்சில் 281 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

* பாகிஸ்தான் டூருக்கான (3 டெஸ்ட் போட்டி) இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், சோயிப் பஷிர், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜார்டன் காக்ஸ், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜோஷ் ஹல், ஜாக் லீச், ஓல்லி போப், மெத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஓல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

* வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் செப். 19ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக நாளை சென்னை வருகின்றனர்.

* இலங்கை அணியுடனான 3வது டெஸ்டில் இங்கிலாந்து தோற்றதற்கு அதீத தன்னம்பிக்கையும், எதிரணி குறித்த அலட்சிய மனப்போக்கும் தான் காரணம். டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வீரர்கள் அவமதித்துவிட்டனர் என முன்னாள் கேப்டன் மைகேல் வாஹன் கடுமையாக விமர்சித்துள்ளார்.