* ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் களமிறங்க உள்ள இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு, பாக். அணி முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பயிற்சி அளிக்க உள்ளார்.
* உலக கோப்பை டி20 தொடருக்கான நேபாளம், ஒமான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அணி வீரர்கள் தேர்வை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மே 24ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, கஜகஸ்தானின் எலனா ரைபாகினா தகுதி பெற்றார். காலிறுதியில் சக வீராங்கனை யூலியா புடின்ட்சேவா (29 வயது, 50வது ரேங்க்) உடன் நேற்று மோதிய ரைபாகினா (24 வயது, 4வது ரேங்க்) 4-6, 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் 2 மணி, 48 நிமிடம் போராடி வென்றார்.