Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலைஞரின் 7வது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் தலைமையில் 7ம் தேதி அமைதிப்பேரணி

சென்னை: சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மயிலை த.வேலு, மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர், சிற்றரசு ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: கலைஞரின் 7வது நினைவுநாளினையொட்டி தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட திமுக முன்னணியினர் கலந்து கொள்ளும் அமைதிப் பேரணி ஆகஸ்ட் 7ம் தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்படும், காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.

இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள்-முன்னாள்-இந்நாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணியினரும் பங்கேற்க வேண்டும்.