புதுடெல்லி: முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசுவதற்காக நாடு காத்திருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. குடியரசு துணை தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘கடந்த 50 நாட்களாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் வழக்கத்திற்கு மாறான மவுனத்தை கடைப்பிடித்து வருகிறார். மோடி அரசினால் விவசாயிகள் ஆழமாக பாதிக்கப்படுவது அதிகாரத்தில் இருப்பவர்களின் அகங்காரம் போன்றவற்றால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அவர் கவலை தெரிவித்ததை தொடர்ந்து, துணை ஜனாதிபதி பதவியை அவர் எதிர்பாராதவிதமாக ராஜினாமா செய்தார். அவர் பேசுவதற்காக நாடு காத்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
+
Advertisement