சிலம்பம் போட்டிக்கான பிரத்யேக ஏஐ டிஜிட்டல் ஸ்கோர் போர்டு: புதிய கண்டுபிடிப்புக்கு அரசு அங்கீகாரம் வழங்கக் கோரிக்கை
மதுரை:தமிழர் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் கலையைக் கற்க டிஜிட்டல் யூக சிறார்களும் ஆர்வம் காண்பிக்கும் சூழலில் சிலம்பம் போட்டிக்கான பிரத்யேக ஏஐ டிஜிட்டல் ஸ்கோர் போர்டு கண்டுபுடித்து அசத்தியுள்ளார் மதுரையை சேர்ந்த சிலம்பம் பயிற்சியாளரும், பொறியாளர் சிவபாண்டியன்.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சென்சார்கள் பொருத்தப்பட்ட சிலம்பம் மற்றும் ஆடைகளை வீரர்கள் அணிந்து கொண்டு சிலம்பம் விளையாடும் போது சிலம்பத்தில் தொடுதல் மூலம் வீரர்கள் எடுக்கும் ஒவ்வரு புள்ளிகளும் துல்லியமாக, இந்த ஸ்கோர் போர்டு பதிவாகும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இருவர் விளையாடும் தொடுமுறை சிலம்பம் போட்டியை தொடுதல்காண புள்ளிகள் வழங்குவதில் சிக்கல்கள் மற்றும் முறைகேடுகளை தவிர்க்க ஏஐ டிஜிட்டல் ஸ்கோர் போர்டு உதவும் என்கிறார் சிவபாண்டியன்.
சிலம்பம் விளையாடும் போட்டிகளில் ஏஐ டிஜிட்டல் ஸ்கோர் போர்டு பயன்படுத்த சிலம்பம் அட்டா சங்கங்களை அணுகியுள்ளதாக கூறும் சிவபாண்டியன் தனது கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.