ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிய விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகிலுள்ள நசியனூர் பெரிய வாய்க்கால் மேடு என்ற பகுதியில் கோவை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து அதன் பின் வந்த கார் மற்றும் ஏடிஎம் இயந்திரத்துக்கு பணம் எடுத்துச் செல்லும் டெம்போ டிராவலர் வாகனம் மற்றும் லாரி என அடுத்தடுத்து மோதி வாகனம் விபத்தில் ஏற்பட்டது. ஆம்னி பேருந்து ஆனது கோயம்புத்தூர் சேர்ந்த பக்தர்கள் திருப்பதிக்கு சென்றுவிட்டு மீண்டும் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆம்னி பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார் அப்போது எதிர்பாரதமாக பின்னாடி வந்த கார் மற்றும் ஏடிஎம் வாகனம், லாரி என அடுத்தடுத்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து சம்பவத்திற்கு வந்த சித்தோடு போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த பக்தர்கள் மற்றும் 10 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. பெரியளவு காயங்கள் என்பது ஏற்படவில்லை. இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்தானது பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதைபோல் ஏடிஎம் இயந்திரத்திலும் சுமார் இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அதில் வந்த செக்யூரிட்டி மற்றும் போலீசார் பாதுகாப்பாக அருகிலுள்ள கனடா வங்கிக்கு ஏடிஎம் என்ற பணம் செலுத்தும் வாகனத்தை எடுத்துச் சென்றனர். தொடர்ந்து விபத்து குறித்து சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


