பெங்களூரு: சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாரின் வீடுகளில் 4 ஆர்டிஎக்ஸ் மற்றும் பல ஐஇடி ஆகிய வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கடந்த 11ம் தேதி தமிழ்நாடு டிஜிபிக்கு இமெயில் வந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காவல் துறை, கர்நாடக போலீசாரை எச்சரிக்கவே, உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுடன் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாரின் வீடுகளில் போலீசார் சோதனை செய்ததில், அது போலியான மிரட்டல் என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, மிரட்டல் விடுக்கப்பட்ட இமெயில் ஐடி தமிழ்நாட்டைச் சேர்ந்த நபருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடிவருகிறோம். கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற மிரட்டல்கள் வருவது அதிகரித்துள்ளது.