இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் வழி நடத்தி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதுவரை ஆடிய 3ஆட்டங்களில் 2-1 என்ற கணக்கி இந்தியா பின்தங்கி உள்ளது. தோற்ற ஆட்டங்களிலும் பெரிய வித்தியாசத்தில் படுதோல்வியை சந்திக்கவில்லை. கூடவே சுப்மன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் 3 டெஸ்ட்களில் ஒரு இரட்டைச் சதம் உட்பட 607ரன் குவித்துள்ளார். இந்நிலையில் 4வது டெஸ்ட் நாளை மான்செஸ்டரில் தொடங்குகிறது. அது குறித்து முன்னாள் வீரர் சஞ்ஜெய் மஞ்ச்ரேக்கர், ‘ இளம் கேபட்னான கில் ஏற்கனவே அணித் தலைவராகவும், வீரராகவும் நமது எதிர்பார்ப்புகளை விஞ்சியுள்ளார்.
முதல் டெஸ்ட்டில் ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்களை சார்ந்து இருந்தார். ஆனால் 2வது டெஸ்ட்டில் தனது இருப்பை உறுதிப் படுத்திக் கொண்டார். அடுத்து 3வது டெஸ்ட்டில் ஏற்பட்டது லேசான பின்னடைவு தான். இப்போது 8 நாட்கள் இடைவெளிக்கு பிறகு 4வது டெஸ்ட் நடைபெற உள்ளது. மான்செஸ்டரில் நடக்க உள்ள அந்த டெஸ்ட்டில் சுப்மன் கில்லின் சிறந்த ஆட்டத்தை நாம் பார்க்கலாம். அவர் சூப்பர் கேப்டனாகவும் ஜொலிக்கப் போகிறார்’ என்று கூறியுள்ளார்.