1. இளநிலை உதவியாளர் : 10 இடங்கள். சம்பளம்: ரூ.18,500-ரூ.58,600. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
2. கூர்க்கா: 2 இடங்கள்.
3. திருவலகு: 4 இடங்கள்.
4. கால்நடை பராமரிப்பாளர்: 2 இடங்கள்.மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான சம்பளம்: ரூ.15,900- ரூ.50,400.தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
5. பெரிய சன்னதி உடல்: 1 இடம்
6. பெரிய சன்னதி வீரவண்டி: 1 இடம்
7. பெரிய சன்னதி சேமக்கலம் மற்றும் இதர வாத்தியங்கள்: 1 இடம்
8. தாயார் சன்னதி வீரவண்டி மற்றும் இதர வாத்தியங்கள்: 1 இடம்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான சம்பளம் : ரூ.18,500- ரூ.58,600.
தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஏதாவதொரு சமய நிறுவனம் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப் பள்ளிகளிலிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
9. உதவி யானைப் பாகன்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.11,600- ரூ.36,800. தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். யானைக்கு பயிற்சியளித்து கட்டுப்படுத்தி வழிநடத்தும் திறனுடன், யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கு மொழியை பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
10. சலவையாளர்: 1 இடம். சம்பளம்: ரூ.11,600- ரூ.36,800. தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
11. கூட்டுபவர்: 6 இடங்கள். சம்பளம்: ரூ.10,000- ரூ.31,500. தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது: மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் 18 லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://srirangamranganathar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.2025.



