Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு : 211 பேரின் கதி என்ன ?

திருவனந்தபுரம் : வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் பலியானார் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது. அதில் 10 தமிழர்களும் அடங்குவர். அங்குள்ள 3 கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால் அங்கு சிக்கியுள்ள 400 குடும்பத்தினரை மீட்பதற்காக ராணுவம்,விமானப்படை, கடற்படை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு அத்தியாவசிய பொருட்கள் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படுகின்றன என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 211 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களில் 1,000 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். வயநாட்டில் கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 3,069 பேர் 45 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வயநாட்டில் 150 ராணுவ வீரர்கள் 2-வது நாளாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.