Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலையில் பள்ளிகள் திறப்பு!!

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலையில் ஒரு மாதத்துக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30ம் தேதி நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் காணாமல் போன 100க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. தற்போது அங்குள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகளில் ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலையில் ஒரு மாதத்துக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. முண்டகையில் பள்ளிகள் உருக்குலைந்த நிலையில் மேப்பாடி, ஏபிஜே ஹாலில் அமைக்கப்பட்ட கட்டடத்தில் வகுப்புகள் நடைபெறுகிறது. கேரள மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி, மாணவர்களை 3 அரசுப் பேருந்துகளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனதை மாற்றி, இதமான சூழலை உருவாக்க ஆசிரியர்கள் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். பரிசுகள், மலர்களை கொடுத்து மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மாணவர்களுக்கு புதிய நோட்டு புத்தகம் மற்றும் தேவையான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.