வால்பாறை: வால்பாறையில் அடிப்படை சுற்றுலா மேம்பாடு அவசியம் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். வால்பாறை கோவை மாவட்டத்தின் கோடை வாசஸ்தலம் ஆகும். மாவட்ட நிர்வாகம் 7ம் சொர்க்கம் என செல்லப் பெயர் சூட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகிறார்கள். வால்பாறையில் சுற்றுலா மேம்பாட்டிற்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வால்பாறையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் படகு இல்ல மேம்பாடு, பூங்கா மேம்பாடு, சுத்தமான கழிப்பிடங்கள், போதுமான இடங்களில் குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, ஓட்டல்கள் மற்றும் காட்டேஜ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு அவற்றின் தரம் உயர்த்த நடவடிக்கை, சாலைகளில் போதுமான சிக்னல்கள் மற்றும் டிவைடர்கள் வைக்கப்பட்டு சாலை ஆக்கிரமிப்பு அகற்றவேண்டும்.
சுற்றுலா தலங்களில் வழிகாட்டி பலகைகள் அமைக்கவேண்டும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான தகவல்களை வழங்கும் தகவல் மையம் அமைக்கப்பட வேண்டும், ஓய்வு அறைகள் அமைக்கப்பட வேண்டும், சுற்றுலா பயணிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்து மேம்படுத்தி சுற்றுலா பயணிகளின் அனுபவத்தை சிறப்பாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வால்பாறை மேம்பாட்டு கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.