உத்தர பிரதேசம், ஹிமாச்சலை புரட்டிப் போட்ட கனமழை: வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம் - படகுகள் மூலம் மீட்கப்படும் மக்கள்
லக்னோ: தொடர் கனமழையால் ஹிமாச்சல், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் தொடர் கனமழையால் கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்து சிறிய கோயில்கள் நீரில் மூழ்கின. பிரயாக்ராஜ் நகரில் விடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியது. மக்கள் தங்களது வீடுகளில் இருந்து கேன்கள் மூலம் தண்ணீரை வரி இரைத்து வெளியேற்றினர்.
இதே போன்று பிரயாக்ராஜின் கரேலி பகுதியில் படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் தொடரும் கனமழையால் மண்டி - கொள்ளு தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. பெருவெள்ளத்தால் உருக்குலைந்த மண்டி பகுதியில் ஹிமாச்சல ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா நேரில் ஆய்வு செய்தார். ஹிமாச்சல் மாநிலத்தில் கனமழை வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170ஐ கடந்துள்ளது.