Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உல்லு, ஆல்ட் உள்பட 25 ஆபாச செயலிகள் இணையதளங்களுக்கு தடை விதித்த ஒன்றிய அரசு!!

டெல்லி: உல்லு, ஆல்ட் உள்பட 25 ஆபாச செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; நாட்டில் ஆபாச படம் மற்றும் பிற ஆபாச உள்ளடக்கங்களை கொண்ட ஓடிடி தளங்கள், இணையதளங்கள், ஆபாச செயலிகள் என்று மொத்தம் 25 தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஆபாசத்தை விளம்பரப்படுத்தும் இணையதளங்கள், செயலிகளும் அடங்கும்.

அதன்படி ALTT, ULLU, Big Shots App, Desiflix, Boomex, Navarasa Lite, Gulab App, Kangan App, Bull App, Jalva App, Wow Entertainment, Look Entertainment உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul App MoodX, NeonX VIP, Fugi, Mojflix, Triflicks உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளங்கள் மற்றும் செயலிகள் நம் நாட்டின் டிஜிட்டல் நெறிமுறைகளை மீறி உள்ளது. நம் நாட்டின் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ல் குறிப்பாக பிரிவு 67 மற்றும் 67ஏ, பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 294 மற்றும் பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்துதல் தடை சட்டம், 1986 பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் இந்த ஓடிடி தளங்கள், இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து இணையதள சேவை வழங்குநர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல ஆபாச இணையதளங்களுக்கு ஒன்றிய அரசு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.