Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் மொத்த டயர் உற்பத்தியில் தமிழ்நாடு 30% உற்பத்தி

சென்னை: இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 30 சதவீதம் சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்பத்தூர் - ஒரகடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. டயர் உற்பத்தி நிறுவனங்களிடம் சுமார் ரூ 15,000 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது.

ஸ்ரீபெரும்பத்தூர்- ஒரகடம் பகுதியில் நாட்டின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனங்கள் அப்போலோ டயர்ஸ், சியட் டயர்ஸ், ஜேகே டயர்ஸ் நிறுவனங்கள் செயல்படுகின்றன. கார், இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் இங்கே உற்பத்தி செய்யப்படுகின்றன. ஹூண்டாய் , ரெனால்ட் நிசான், யமஹா, ராயல் என்பீஃல்டு ஆகிய வாகன உற்பத்தி நிறுவனங்களும் இப்பகுதியில் உள்ளதால் இவை டயர் உற்பத்திக்கு மேலும் ஆதரவாக உள்ளன.

சென்னை, காட்டுப்பள்ளி, காமராஜர் என மிகப்பெரிய 3 துறைமுகங்கள் இப்பகுதிகளுக்கு மிக அருகில் இருப்பது, மேலும், உட்கட்டமைப்பு வசதிகள் தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதால் உள்நாட்டு மட்டுமில்லாமல் ஏற்றுமதி விநியோகஸ்தர்களுக்கும் ஏற்ற இடமாக உள்ளது. வலுவான உட்கட்டமைப்பு வலுவான அரசின் ஆதரவு இருப்பதால் தங்கள் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய ரூ 450 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக சியட் சமீபத்தில் தெரிவித்து இருந்தது.

திறமையான மனிதவளமும், உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பும் இப்பகுதியில் இருப்பதாக ஜேகே டயர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஆசியாவில் மிகப்பெரிய டயர் உற்பத்தி ஆலை அமைத்து விரிவுபடுத்துவதற்கும் உலக நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பால கட்டுமான மையத்திற்கு சுமார் 5,500கோடி முதலீடு செய்துள்ளதாக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகன உற்பத்தி மையமாக சென்னை திகழ்வது நம் அறிந்தது தான் ஆனால் இப்பகுதிகள் தற்போது மின் பொருட்களுக்கும், டயர் உற்பத்திக்கும் முக்கியம் வாய்ந்த இடமாக திகழ்ந்து வருகிறது.