Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை; இந்தியர்களை வேலைக்கு எடுக்கக்கூடாது; கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்: இனி இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது என்று கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அமெரிக்காவுக்கும் அமெரிக்கர்களின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது மற்ற நாடுகளை கடுமையாக பாதித்து வருகிறது. இதனிடையே வாஷிங்டனில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நீண்ட காலமாக அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறை தீவிரமான உலகமயமாக்கலைப் பின்பற்றியது.

மற்ற நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த நடைமுறை, லட்சக்கணக்கான அமெரிக்கர்களை நம்பிக்கையற்றவர்களாகவும் துரோகிகளாகவும் உணர வைத்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, சீனாவில் தொழிற்சாலைகளை நிறுவி அவற்றில் இந்தியாவில் இருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி அமெரிக்காவின் சுதந்திரத்தை சீர்குலைத்துள்ளன என்று உங்களுக்குத் தெரியும். அதேநேரத்தில் அமெரிக்கர்களை பணிநீக்கம் செய்ததும் நடந்தது. கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், அமெரிக்கா வழங்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி முன்னணி நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்டுகின்றன.

ஆனால், வெளிநாடுகளிலேயே அதிக முதலீட்டை செய்கின்றன. இனி அது நடக்காது. இந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் உருவாகி, நம்முடைய வாய்ப்புகளை எடுத்துக்கொள்கின்றன. எனவே, அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளைக் கட்டுவதையும், இந்தியர்களை வேலைக்கு எடுப்பதையும் விட்டு விட்டு, உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.