Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிரம்ப் உண்மையை சொன்னதற்கு மகிழ்ச்சி இந்திய பொருளாதாரம் செத்துவிட்டது பிரதமர் மோடிக்குத்தான் தெரியாது: ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: இந்திய பொருளாதாரம் செத்துவிட்டதாக டிரம்ப் சொல்வது சரிதான். பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர மற்ற அனைவருக்கும் இந்தியப் பொருளாதாரம் செத்துப் போய்விட்டது என்பது தெரியும். இந்த விஷயத்தில் டிரம்ப் உண்மையை சொன்னதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். பாஜ தலைமையிலான அரசாங்கம் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை அழித்துவிட்டது. அதானிக்கு உதவுவதற்காக பாஜ இந்திய பொருளாதாரத்தை அழித்துவிட்டது. எங்களிடம் சிறந்த வெளியுறவுக்கொள்கை உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு உரை நிகழ்த்துகிறார்.

ஒருபுறம், அமெரிக்கா உங்களை துஷ்பிரயோகம் செய்கிறது, மறுபுறம் சீனா உங்களைத் துரத்துகிறது, மூன்றாவதாக, நீங்கள் உலகம் முழுவதும் பிரதிநிதிகளை அனுப்பும்போது, எந்த நாடும் பாகிஸ்தானைக் கண்டிப்பதில்லை. அவர்கள் எப்படி நமது நாட்டை வழி நடத்துகிறார்கள்? அவர்களுக்கு நாட்டை எப்படி வழி நடத்துவது என்று தெரியவில்லை. மக்களவையில் பேசிய பிரதமர் மோடியின் உரையில் டிரம்பின் பெயரையோ அல்லது சீனாவையோ குறிப்பிடவில்லை. அதிபர் டிரம்ப் இப்போது 25 சதவீத வரி விதிப்பேன் என்று கூறுகிறார். மோடி ஏன் பதிலளிக்க முடியவில்லை, காரணம் என்ன என்று கேட்டீர்களா? யாருடைய கட்டுப்பாடு இது?.

இன்று இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை, நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை அரசாங்கம் அழித்துவிட்டது. அவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியை தரையில் வீழ்த்துகிறார்கள்.

அதானி என்ற ஒரு நபருக்காக மட்டுமே பிரதமர் வேலை செய்கிறார். அனைத்து சிறு வணிகங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. பேச்சுவார்த்தையில் உள்ள இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நடக்கும். ஆனால் இந்த ஒப்பந்தம் எப்படி நடக்கும் என்பதை டிரம்ப் வரையறுப்பார். டிரம்ப் சொல்வதை மோடி செய்வார். இவ்வாறு கூறினார்.

* ‘இந்திய பொருளாதாரத்தை கொன்றது பிரதமர் மோடி’

ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில்,’ இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது. மோடி அதைக் கொன்றுவிட்டார். 1. அதானி-மோடி கூட்டு. 2. பணமதிப்பிழப்பு மற்றும் குறைபாடுள்ள ஜிஎஸ்டி 3. இந்தியாவில் ‘அசெம்பிள்’ செய்வது தோல்வியடைந்தது 4. சிறுகுறு தொழில்கள் அழிக்கப்பட்டன.5. விவசாயிகள் நசுக்கப்பட்டனர். வேலைகள் இல்லாததால் இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை மோடி அழித்துவிட்டார். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.