Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வெளிநாடு செல்லும் எம்பிக்கள் குழுவில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகியது ஏன்?: மேற்குவங்க முதல்வர் மம்தா விளக்கம்

கொல்கத்தா: வெளிநாடு செல்லும் எம்பிக்கள் குழுவில் இருந்து திரிணாமுல் எம்பி யூசுப் பதான் விலகியது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா விளக்கம் அளித்துள்ளார். எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்து உலக நாடு​களின் தலை​வர்​களிடம் ஆதா​ரத்​துடன் விளக்​கும்​வித​மாக சசி தரூர், கனி​மொழி உட்பட 7 பேர் தலை​மை​யில் எம்​பிக்​கள் குழுக்​களை ஒன்றிய அரசு அமைத்​துள்​ளது. இந்த 7 குழுக்​களில் 59 பேர் இடம் பெற்​றுள்​ளனர். இதில் 51 பேர் எம்​பிக்​கள் ஆவர். 8 பேர் வெளி​யுறவுத் துறை அதி​காரி​கள் ஆவர்.

பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணியை சேர்ந்த 31 எம்​பிக்​கள், எதிர்க்​கட்​சிகளை சேர்ந்த 20 எம்​பிக்​கள் 7 குழுக்​களில் இடம்​பெற்​றுள்​ளனர். ஐக்​கிய ஜனதா தள எம்பி சஞ்​சய் ஜா தலை​மையி​லான குழு​வில் முன்னாள் கிரிக்கெட் வீரரான திரிணாமுல் காங்​கிரசை சேர்ந்த எம்பி யூசுப் பதான் இடம்​பெற்​றிருந்​தார். இந்த குழு இந்​தோ​னேசி​யா, மலேசி​யா, தென்​கொரி​யா, ஜப்​பான், சிங்​கப்​பூர் ஆகிய நாடு​களுக்கு பயணம் செய்ய திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. இந்நிலையில் எம்​பிக்​கள் குழு​வில் இருந்து யூசுப் பதான் வில​கி​விட்​டார். இதுகுறித்து மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ‘ஆபரேஷன் சிந்தூர் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை, உலகளவில் எடுத்து சொல்வதற்காக செல்லும் ஒன்றிய அரசின் எம்பிக்களின் குழுவிற்கான பிரதிநிதிகளின் பெயர்களை அந்தந்த கட்சிகளின் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.

எங்களது கட்சி வெளிநாடு செல்லும் குழுவில் இடம் பெற்றுள்ளது. நாங்கள் அந்த குழுவை புறக்கணிக்கவில்லை. ஆனால் ஒன்றிய அரசின் ஒருதலைப்பட்ச முடிவுகளை ஏற்க மாட்டோம். பிரதிநிதிகளின் பெயரை ஒன்றிய அரசு முடிவு செய்ய முடியாது. அந்தந்த கட்சிகள் தான், தங்களது கட்சியின் பிரதிநிதிகளை பரிந்துரை செய்யும். இதுதான் வழக்கம்; இதுதான் நடைமுறையும் கூட. வெளியுறவுக் கொள்கையில் நாங்கள் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஒன்றிய அரசு எங்களை அணுகியிருந்தால், எங்களது கட்சியின் பிரதிநிதியை அனுப்பியிருக்கும்.

ஆனால் எந்த கோரிக்கையும் வரவில்லை’ என்றார். மம்தாவின் கருத்தின் அடிப்படையில் யூசுப் பதான் வெளிநாடு செல்லும் குழுவிலிருந்து விலகினார். இதுகுறித்து திரிணாமுல் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறுகையில், ‘தீவிரவாதத்தை ஒழிக்கவும், தேசிய இறையாண்மையை பாதுகாக்கவும் ஒன்றிய அரசின் முடிவுகளுக்கு எங்களது கட்சி தோளோடு தோள் நின்று ஆதரிக்கும். ஆனால், பல கட்சியின் குழுவிற்கான எம்பிக்கள் பிரதிநிதிகளை அந்தந்த கட்சிகள் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்விசயத்தில் ஒன்றிய அரசு ஒருதலைப்பட்சமாக முடிவு செய்ய முடியாது’ என்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலை​வர் அமித் மாள​வியா கூறுகையில், ‘மேற்​கு​வங்க முதல்​வரும் திரிணாமுல் காங்​கிரஸ் தலை​வரு​மான மம்தா பானர்​ஜி​யின் முடி​வால் திரிணாமுல் எம்பி யூசுப் பதான் எம்​பிக்​கள் குழு​வில் இருந்து விலகி உள்​ளார். இது துர​திர்ஷ்ட​வச​மானது. எம்​பிக்​கள் குழுக்​களின் வெளி​நாட்டு பயணம் நாட்​டின் நலன் சார்ந்​தது, அரசி​யலுக்கு அப்​பாற்​பட்​டது. இந்த விவ​காரத்​தில் முதல்​வர் மம்தா பானர்ஜி அரசி​யல் செய்​வதை ஏற்​றுக் கொள்ள முடிய​வில்​லை’ என்றார்.