Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பேருந்து முனையத்திலிருந்து பேருந்து சேவையை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடக்கி வைத்தார். கடந்த மே மாதம் பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில், ரூ.408 கோடி ஏசி, லிஃப்ட், எஸ்கலேட்டர் என பல வசதிகளுடன் கட்டப்பட்ட கலைஞர் ஒருங்கிணைத்த பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சிராப்பள்ளி மாநகர், பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில், 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டி, 128.94 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் 408.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசால், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குடிநீர்த் திட்டங்கள், நகர்ப்புர வளர்ச்சித் திட்டங்கள், மின்வசதி, சாலை வசதி, பாலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வேளாண் வளர்ச்சித் திட்டங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குகின்ற வகையில் சிப்காட், டைடல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உருவாக்கம், மக்களின் நலனுக்கான புதிய மருத்துவ கட்டமைப்புகள் என பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாகத் திகழ்ந்து வருகிறது.

இதையடுத்து இன்று முதல் இப்பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பேருந்துகள் இயக்கத்தினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட அனைத்து புறநகர் மற்றும் நகரப் பேருந்துகளும் இனி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தை மையமாகக் கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் பயணிகளை ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு அருகில் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ள காலி இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.